மதுரை : திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா குணமானோர் எண்ணிக்கை 10 ஆயிரத்தை நெருங்குகிறது.
மதுரை
மதுரை மாவட்டத்தில் புதிதாக 45 பேர் கொரோனாவில் இருந்து மீண்டனர். இதுவரை 18,851 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். புதிதாக 24 பேர் பாதிக்கப்பட்டனர். ஒருவர் பலியானார். மொத்த பாதிப்பு 19,533 ஆகும். இதுவரை 437 பேர் இறந்துள்ளனர். தற்போது 245 பேர் சிகிச்சை பெறுகின்றனர்.
திண்டுக்கல்
திண்டுக்கல்லில் நேற்று 15 பேர் டிஸ்சார்ஜ் ஆகினர். குணமடைந்தோர் எண்ணிக்கை 9876 ஆக உயர்ந்தது. நேற்று 13 பேர் உட்பட இதுவரை மொத்தம் 10,137 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது 68 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
தேனி
தேனி மாவட்டத்தில் நேற்று 12 பேர் டிஸ்சார்ஜ் ஆகினர். இதுவரை 16,296 பேர் குணமடைந்துள்ளனர். புதிதாக 10 பேருக்கு கொரோனா உறுதியானதால் பாதிப்பு 16,518 ஆக உயர்ந்தது. நேற்று உயிரிழப்பு இல்லை. பலி 312 ஆகவுள்ளது.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று கொரோனாவில் இருந்து 12 பேர் மீண்டனர். 9 பேர் புதிதாக பாதிக்கப்பட்டனர். இதுவரை 6179 பேர் பாதிக்கப்பட்டதில் 6003 பேர் குணமடைந்துள்ளனர். 45 பேர் சிகிச்சையில் உள்ளனர். 131 பேர் பலியாகியுள்ளனர்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டத்தில் நேற்று 13 பேர் குணமடைந்தனர். நேற்று 9 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டது. 6230 பேர் பாதிக்கப்பட்டதில் 6036 பேர் குணமடைந்தனர். தற்போது 68 பேர் சிகிச்சையில் உள்ளனர்.126 பேர் பலியாகியுள்ளனர்.
விருதுநகர்
விருதுநகரில் நேற்று 17 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். 10 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டது. மொத்தம் பாதிப்புக்குள்ளனா 15,792 பேரில் 15,494 பேர் குணமடைந்துள்ளனர். 73 பேர் சிகிச்சையில் உள்ளனர்.--