கரூர்: தமிழ்நாடு வேளாண் பல்கலை (கோவை) இளநிலை பட்டப்படிப்புக்கான கலந்தாய்வு, ஆன்லைன் மூலம் வரும், 26 முதல் தொடங்குகிறது. பல்கலை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கை: வேளாண் பல்கலைகழகத்தில் நடப்பாண்டு, இளநிலை படிப்புக்கு கலந்தாய்வு ஆன்லை ன் மூலம் நடைபெறும். அதில், பொதுப்பிரிவினருக்கு வரும், 26 முதல், 28 வரையிலும், சிறப்பு பிரிவினருக்கு கலந்தாய்வு, 30 மற்றும் வரும் டிசம்பர், 1 ல் நடைபெறும். இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.