கிருஷ்ணராயபுரம்: பழையஜெயங்கொண்டம் பகுதியில், பிளாஸ்டிக் பைகள் கண்டறிந்து அபராதம் விதிக்கும் பணி நடந்தது. கிருஷ்ணராயபுரம் அடுத்த, பழைய ஜெயங்கொண்டம் டவுன் பஞ்., பகுதியில் கடைகள் செயல்படுகின்றன. இந்த கடைகளில் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தப்படுகிறது. இதனால், சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுகிறது. அதன்படி, கடைகளில் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்துவதை தடுக்கும் வகையில், செயல் அலுவலர் ராஜகோபால் தலைமையில் ஆய்வு பணி நடந்தது. இதில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டன. கடையின் உரிமையாளர்களுக்கு அபாராதம் விதிக்கப்பட்டது. மேலும், பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.