குளித்தலை: தமிழ்நாடு அரசு சிறைகள் மற்றும் சீர்திருத்த பணிகள் துறை சார்பில், கொரோனா நோய் தடுப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது. குளித்தலை தாலுகா அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் கிளை சிறை சார்பில், கொரோனா நோய் தடுப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது. கிளை சிறை கண்காணிப்பாளர் ஷர்மிளா தலைமை வகித்தார். இந்த பேரணி, தாலுகா அலுவலகத்தில் இருந்து , பஸ் ஸ்டாண்ட் காந்தி சிலை வழியாக திருச்சி -கரூர் தேசிய நெடுஞ்சாலை சுங்ககேட் வரை சென்று, துவங்கிய இடத்திலேயே முடிந்தது. கொரோனா நோய் தடுப்பு விழிப்புணர்வு குறித்து துண்டு பிரசுரங்கள் மற்றும் முக கவசம் வழங்கினர். நோய் தடுப்பு வழிமுறை, சமூக இடைவெளியை பின்பற்றுதல் குறித்தும், விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தலைமை காவலர் சண்முக வடிவேலு, சகாய ராஜ், போலீசார் கலந்து கொண்டனர்.