குளித்தலை: வரவணையில், பட்டதாரி பெண் மாயமானார். குளித்தலை அடுத்த, வரவணையை சேர்ந்தவர், 24 வயது இளம்பெண். எம்.பி.ஏ.. பட்டதாரி. கடந்த, 21 இரவு, 9:30 மணியளவில் வீட்டின் அருகே மொபைல் போனில் பேசிக் கொண்டிருந்தார். சிறிது நேரத்தில் எங்கே சென்றார் என தெரியவில்லை. பல இடங்களில் தேடியும், விசாரித்தும் எந்தவித தகவலும் கிடைக்கவில்லை. அவரது சகோதரர் கொடுத்த புகார்படி, சிந்தாமணிப்பட்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.