குளித்தலை: குளித்தலை அருகே, பள்ளி மாணவிக்கு பிரசவமான நிலையில், இறந்து பிறந்த சிசுவை புதைத்த விவகாரத்தில், மேலும் இருவரை போலீசார் கைது செய்தனர்.
கரூர் மாவட்டம், குளித்தலை அடுத்த, கருப்பத்தூர் பஞ்., வேங்காம்பட்டி காலனியை சேர்ந்த, 15 வயது மாணவியை, அதே பகுதியை சேர்ந்த ரஞ்சித், 24, என்பவர் திருமண ஆசை காட்டி பழகியதில், மாணவி கர்ப்பமடைந்தார்.கடந்த, 17ல், சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்து இறந்தது. தகவலறிந்த குளித்தலை மகளிர் போலீசார், மாணவியிடம் புகாரை பெற்று, ரஞ்சித், அவர் தந்தை நல்ல தம்பி, 50, தாய் சந்திரா, 45, மாமன் முத்துசாமி,54, ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். பிறந்த பெண் சிசுவை, ரஞ்சித் சகோதரர் ரமேஷ், 21, குளித்தலை கடம்பர் கோவில் ஆற்றங்கரை மயானத்தில், புதைத்தது தெரியவந்தது. நேற்று முன்தினம் மாலை, டி.எஸ்.பி., சசிதர், தாசில்தார் முரளிதரன், போலீசார் முன்னிலையில், சிசுவை தோண்டி எடுத்தனர். நல்லதம்பி, சந்திரா, ரமேஷ் ஆகியோரை, மகளிர் போலீசார் கைது செய்தனர். இந்நிலையில், நேற்று, ரஞ்சித், முத்துசாமியை கைது செய்தனர்.