கரூர்: கரூர் அருகே சிறுமிக்கு, பாலியல் தொல்லை கொடுத்ததாக, பள்ளி சிறுவன் உள்பட, இரண்டு பேரை, மகளிர் போலீசார் கைது செய் தனர். கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் பகுதியை சேர்ந்த, 25 வயதுடைய பெண்; ஓட்டல் தொழிலாளி. 12 வயதுடைய இவரது மகளுக்கு, அதே பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி அகமது அமானூல்லா, 20; புன்னம் சத்திரத்தை சேர்ந்த, 16 வயது பிளஸ் 2 மாணவன் ஆகியோர், கடந்த, 16ல் பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். இதுகுறித்து, சிறுமியின் தாய் கரூர் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில், நேற்று முன் தினம் புகார் கொடுத்தார். புகாரின்படி, இருவரையும், போக்சோ சட்டத்தின் கீழ், மகளிர் போலீசார் கைது செய்தனர்.