கிருஷ்ணராயபுரம்: மேல பஞ்சப்பட்டியில், காவிரி நீர் வினியோகம் இல்லததால், மக்கள் அவதிப்படுகின்றனர். கிருஷ்ணராயபுரம் அடுத்த, பஞ்சப்பட்டி பஞ்., மேல பஞ்சப்பட்டி, கடைவீதி ஆகிய இடங்களில், ஏராளமான மக்கள் வசிக்கின்றனர். அரசு அலுவலகம் செயல்படுகிறது. இந்த இடங்களில், நல்ல குடிநீர் வினியோகம் இல்லை. உப்பு தண்ணீர் மட்டும் வினியோகம் நடக்கிறது. இதனால் மக்கள் அவதிப்படுகின்றனர். இந்த பகுதிக்கு, காவிரி குடிநீர் வினியோகம் செய்ய பஞ்.,நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.