கரூர்: கரூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலை பகுதிகளில் பயணிகள் வசதிக்காக நிழற்கூடம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் அமைக்கப்பட்டிருந்த இருக்கைகளை காணவில்லை. இதனால், பஸ்சுக்காக நீண்ட நேரம் காத்திருக்கும் பயணிகள், அவதிப்படுகின்றனர். எனவே, தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பஸ் நிறுத்த நிழற்கூடங்களில், பயணிகள் அமர வசதியாக, இருக்கைகளை உடனடியாக அமைக்க வேண்டும். இதுகுறித்து, பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இல்லாவிடில் அவை பயனற்றதாகிவிடும் என்பதில் ஐயமில்லை.