கரூர்: பஸ் ஸ்டாண்டில், மினி பஸ்கள் போட்டி போட்டு செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
கரூர், பஸ் ஸ்டாண்ட் அருகில் மினி பஸ்கள் நிற்குமிடம் உள்ளது. இங்கிருந்து, 40க்கும் மேற்பட்ட மினி பஸ்கள் கோதூர், வடிவேல்நகர், வேலுசாமிபுரம், ஆண்டாங்கோவில், சுக்காலியூர், வெங்கமேடு, அருகம்பாளையம், காந்திகிராமம், தாந்தோணிமலை, ராயனூர் போன்ற வழித்தடங்களில் இயக்கப்படுகின்றன. 'டிரிப்' இல்லாத நேரங்களில் கூட நீண்டநேரம் பஸ் ஸ்டாண்டில் மினி பஸ்களை நிறுத்தி வைத்து விடுகின்றனர். இதனால் நெரிசல் ஏற்படுகிறது. 'டிரிப்' நேரத்திற்காக முண்டியடிப்பதால், தொடர்ந்து ஹாரன் அடிக்கின்றனர். பயணிகளின் காதை செவிடாக்கும் அளவுக்கு ஒலி அதிகமாக இருக்கிறது. மேலும், பஸ் நிறுத்தம் இல்லாத இடங்களில் பயணிகளுக்காக நீண்ட நேரம் காத்திருக்கின்றனர். இதனால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. நெரிசலான இடத்தில் கட்டுப்பாடுகளை விதித்து நிறுத்தும் நேரத்தை வரையறை செய்ய வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.