மாமல்லபுரம் : மாமல்லபுரம், தொல்லியல் விநாயகர் கோவிலில், வழிபட அனுமதிக்க வேண்டும் என, பக்தர்கள் வலியுறுத்துகின்றனர்.
மாமல்லபுரத்தில், தொல்லியல் வளாக, பழங்கால விநாயகர் கோவிலில், பக்தர்கள் வழிபடுகின்றனர். பல்லவர் கால, கணேச ரத குடைவரை கோவிலில், நீண்ட காலத்திற்கு முன், பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலையை, பக்தர்கள் வழிபடுகின்றனர். விநாயகர் சதுர்த்தியில், தொல்லியல் துறை, உற்சவம் நடத்துவது குறிப்பிடத்தக்கது.அர்ச்சுனன் தபசு சிற்ப பகுதி, தொல்லியல் வளாகத்தில், கோவில் உள்ளது. கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு, சுற்றுலா தடையால், எட்டு மாதங்களாக வளாகம் மூடப்பட்டு உள்ளதால், பக்தர்களை அனுமதிப்பதில்லை.
கேரள மாநில சபரிமலைக்கு செல்லும் அய்யப்ப பக்தர்கள், இங்கு வழிபடும் சூழலில், வழிபாட்டிற்கு அனுமதிக்க வேண்டும் என, பக்தர்கள் வலியுறுத்துகின்றனர்.