மாமல்லபுரம் கடலோர பகுதிகளில், நேற்று காலை முதல், கடல் கொந்தளித்து, அலைகள் உயர்ந்து சீறி, கரை பகுதியை தாக்கின
மாமல்லபுரம், கல்பாக்கம், கூவத்துார் உள்ளிட்ட கடலோர பகுதிகளில், மிதமான மழை, அவ்வப்போது பெய்தது. மீனவர், மீன்பிடி படகுகள், வலைகளை, மேட்டுப் பகுதிகளில் பாதுகாத்தனர்.உள்ளாட்சி ஊழியர்கள், மீனவர், சமுதாயக் கூடம் உள்ளிட்ட பாதுகாப்பு இடங்களில் தங்கவும், ஆதார், ரேஷன் உள்ளிட்ட ஆவணங்களை பாதுகாக்கவும், ஒலிபெருக்கியில் அறிவித்தனர்.திருக்கழுக்குன்றம் தாசில்தார் பருவதா, சமுதாயக் கூடம் உள்ளிட்ட ஏற்பாடுகளை ஆய்வு செய்தார்.
வாலாஜாபாத் ஒன்றியத்தில், ஊராட்சி தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில், 23 பேரிடர் பாதுகாப்பு மையங்கள், தற்காலிகமாக அமைக்கப்பட்டு உள்ளன.இந்த மையங்களில், குடிநீர் மற்றும் மின்சாரம் உள்ளிட்ட பாதுகாப்பு வசதிகள் இருக்கின்றனவா என, ஊரக வளர்ச்சி துறையினர், நேற்று அரசு பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.கட்டுப்பாட்டில் கிராமங்கள் கோவளம் கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் கட்டுப்பாட்டில் ஏழு கடலோர கிராமங்கள் உள்ளன. கடலோர போலீசார், 30 பேருடன், ஊர் காவல்படை போலீஸ், 15 பேர் மற்றும் தன்னார்வலர்கள், 80 பேர் இணைந்து புயல் முன்னெச்சரிக்கை பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தாழ்வான பகுதிகளில் வசிப்போரை வெளியேற்றி, பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்தல், படகுகள் மற்றும் வலைகளை பாதுகாத்தல், பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்துதல் போன்ற பணிகளில் ஈடுபட்டுஉள்ளனர்.90 கமாண்டோக்கள் ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்ட தீயணைப்புத் துறை அலுவலர் குமார் கூறியதாவது:செய்யூர் பகுதியில் மீட்புப் பணிக்காக, 25 பேர்; மாமல்லபுரம் - 40 பேர் உட்பட, மொத்தம், 90 கமாண்டோக்கள், தயார் நிலையில் உள்ளனர்.
மேலும் ஏழு வாகனங்கள், ஆறு படகுகள், உயிர்காக்கும் மிதவைகள் - 300, மரங்கள் அகற்றும் கருவிகள், ஜெனரேட்டர், அவசர விளக்குகள் போன்றவை தயார் நிலையில் உள்ளன.புயலின் தாக்கம் தணியும் வரை, ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில், அனைத்து தீயணைப்பு நிலையங்களில், பணியாளர்கள் விடுப்பு மற்றும் வீட்டுக்கு செல்வது கூடாது என, அறிவுறுத்தப் பட்டு உள்ளது. இவ்வாறு, அவர் கூறினார். இதேபோல், உத்திரமேரூர் தீயணைப்பு நிலைய கட்டுப்பாட்டு பகுதியில், மீட்பு நடவடிக்கைக்காக, அனைத்தும் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன.ஏரிக்கரையில் ஆய்வுகாஞ்சிபுரம் மாவட்டத்தில், பெரிய ஏரிகளுள் ஸ்ரீபெரும்புதுார் ஏரியும் ஒன்று.
இந்த ஏரி, 675 ஏக்கர் நீர்ப்பிடிப்பு பகுதியும், 17.6 அடி உயரமும் உடையது. கன மழையால், இந்த ஏரி, 90 சதவீதம் நிரம்பிஉள்ளது.இந்நிலையில், ஸ்ரீபெரும்புதுார் ஏரிக்கரை மற்றும் மதகுகளின் உறுதி தன்மையை கண்டறிய, ஸ்ரீபெரும்புதுார் பொதுப்பணித் துறை இளநிலை செயற்பொறியாளர் மார்க்கண்டேயன் மற்றும் பொதுப்பணி துறையினர், நேற்று, ஏரி நீரில் படகில் சென்று, ஏரிக்கரை, மதகுகளை ஆய்வு செய்தனர்.மரத்தை வெட்டிய மின் ஊழியர்கள் திருக்கழுக்குன்றம் அடுத்த, நெரும்பூரில் துணை மின் நிலையம் இயங்குகிறது.
இதன் வளாகத்தில், பெரிய அளவில் மரங்கள் உள்ளன. புயல் முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கையாக, அலுவலக வளாகத்தில் உள்ள மரக்கிளைகளை வெட்டும் பணியை, ஊழியர்கள் மேற்கொண்டனர். குடியிருப்பு பகுதிகளிலும், இடையூறான மரக்கிளைகளை வெட்டி அப்புறப்படுத்தினர்.7 சப் - கலெக்டர்கள் நியமனம்காஞ்சிபுரம் மாவட்டத்தில், புயல் மற்றும் மழைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து, கலெக்டர் மகேஸ்வரி, நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:காஞ்சிபுரம் மாவட்டத்தில், 126 இடங்கள், தாழ்வான பகுதிகளாக கண்டறியப்பட்டு, 19 மண்டல குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
இந்த குழுக்களை கண்காணிக்க, ஏழு சப் - கலெக்டர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள, 381 ஏரிகள், 75 சதவீதத்திற்கும் மேலாக நிரம்பியுள்ளன.ஊராட்சி செயலர்கள் மற்றும் கிராம உதவியாளர்கள், ஏரிகளை கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.தவிர, 65 மரம் அறுக்கும் இயந்திரங்கள், 64 ஜெனரேட்டர்கள், 52 ஆயிரத்து, 400 மணல் மூட்டைகள், 3,945 சவுக்கு கம்புகள், 3,907 மின்கம்பங்கள், 98 மின்மாற்றிகள், 27 ஆம்புலன்ஸ், 377 மருத்துவ குழுக்கள், 85 படகுகள், நீர் உறிஞ்சி கருவிகள் மற்றும் பொக்லைன் இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.புகார் தெரிவிக்க எண்கள்புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் கலெக்டர் அலுவலகத்தில், கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டு உள்ளது. பொதுமக்கள், மழை தொடர்பாகவும், கால்நடை பாதிப்பு, குடியிருப்பு சேதம் உள்ளிட்ட தகவல்களுக்காகவும், புகார் தெரிவிக்கலாம் என, மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.கட்டுப்பாட்டு அறை எண்கள்:கட்டுப்பாட்டு அறை - 1: 044 - 2723 7107கட்டுப்பாட்டு அறை - 2: 044 - 2723 7207வாட்ஸ் ஆப் எண்: 94450 71077போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறை எண்:மாவட்ட காவல் அலுவலகம்: 044 - 2723 9200உதவி காவல் கண்காணிப்பாளர்:- 94981 00262மணிமங்கலம் போலீஸ் - -94981 00266