திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டத்தில், 133 பகுதிகள் அதிகளவில் பாதிக்கப்படும் என கண்டறியப்பட்டு, 64 மீட்டு பணி, 64 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில், 'நிவர்' புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து, கலெக்டர் பொன்னையா விடுத்துள்ள அறிக்கை:திருவள்ளூர் மாவட்டத்தில், கடலோரப் பகுதிகளில், 70 கிராமம் உள்ளன. மிக அதிகமாக பாதிப்பு ஏற்படும் பகுதி - 8, அதிகளவில் பாதிப்பு பகுதி - 39; மிதமாக பாதிப்பு பகுதி - 44; குறைவாக பாதிப்பு பகுதி - 42, என, மொத்தம், 133 பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளது. இப்பகுதிகளில், 64 மீட்பு குழு அமைத்து தயார் நிலையில் உள்ளனர்.
மக்கள் பாதுகாப்பாக தங்க வைக்க, புயல் பாதுகாப்பு மையங்கள், வைரவன் குப்பம், காட்டுப்பள்ளி ஆகிய இரண்டு இடங்களிலும்; பல்நோக்கு பாதுகாப்பு மையம், திருப் பாலை வனம், ஆண்டார்மடம், பள்ளிப்பாளையம், எளாவூரில் என, ஐந்து இடங்களில் அனைத்து வசதிகளுடன் தயார் நிலையில் உள்ளன. மேலும், 660 தற்காலிக தங்குமிடங்களும், தயார் நிலையில் உள்ளன. கால்நடைகளை காப்பாற்ற, 64 தற்காலிக தங்குமிடம்; 144 முதல்நிலை பொறுப்பாளர்கள் பயிற்சி அளிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளனர்.
சுகாதாரத் துறையில், 42 மருத்துவ குழுக்களும், 32 இடங்களில் அவசரகால மருத்துவ ஊர்தி, தேவையான மருந்து பொருட்கள்; ஊராட்சி அளவில் மூன்று நடமாடும் மருத்துவ குழு, தயார் நிலையில் உள்ளன.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.பழவேற்காடில் கடல் சீற்றம் பழவேற்காடு கடல் பகுதியில், நேற்று கடல் சீற்றம் அதிகமாக இருந்ததது. கடலில், 10 - 15 அடி உயரத்திற்கு அலை எழும்பின. புயல் காரணமாக, பழவேற்காடு பகுதி மீனவர்கள், கடந்த, 23ம் தேதியில் இருந்து, மீன்பிடி தொழிலுக்கு செல்லாமல் வீடுகளில் உள்ளனர்.மீனவர்களின் வலைகள் மற்றும் படகுகள் ஏரியின் கரைப் பகுதிகளில் பாதுகாப்பாக கட்டி வைக்கப்பட்டுள்ளன.
பொன்னேரி வருவாய், மீன்வளம் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள், பழவேற்காடில் முகாமிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர்.அதிகாரிகளுக்கு சுற்றறிக்கைதிருத்தணி வருவாய் கோட்டாட்சியர் சத்யா கூறியதாவது:அனைத்து துறை அதிகாரிகள் தலைமை இடத்தில் தங்கியிருக்க வேண்டும் என, சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது. இதுதவிர, புயல் பாதிப்பு குறித்து உடனுக்குடன் தெரிவிக்க, ஒவ்வொரு ஊராட்சியிலும், கிராம நிர்வாக அலுவலர், ஊராட்சி செயலர், ரேஷன் கடை விற்பனையாளர், அங்கன்வாடி ஊழியர் மற்றும் தன்னார்வலர் என, ஐவர் குழு அமைத்து உள்ளோம்.
மழைநீர் சூழ்ந்து பாதிக்கப்பட்டவர்களை பாதுகாப்பாக மீட்டு, சமுதாய கூடம் மற்றும் பள்ளிகளில் தங்க வைத்து, குடிநீர், உணவு, போன்ற அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தர வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளேன்.இவ்வாறு அவர் கூறினார்.மின் ஊழியர்கள் தயார்மின்வாரிய ஊழியர்கள் முன் எச்சரிக்கையாக, மின் ஒயர்கள் அருகில் செல்லும் மரக்கிளை களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். பொன்னேரி பேரூராட்சி நிர்வாகம், தண்ணீரை வெளியேற்ற மின்மோட்டார்கள், மரம் அறுக்கும் இயந்திரம், மழைநீரில் சிக்கியவர்களை மீட்க கயிறுகள் போன்ற பல்வேறு உபகரணங்கள் தயார் நிலையில் வைத்துள்ளனர்.
மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளுக்கு தண்ணீர் ஏற்றுவதற்கு, எட்டு ஜெனரேட்டர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுஉள்ளன. பொதுப்பணித்துறையினர் மணல் மூட்டைகளை தயார் நிலையில் வைத்துஉள்ளனர்.கலெக்டர் ஆய்வுகும்மிடிப்பூண்டி தாலுகாவில், ஆரம்பாக்கம், நொச்சிக்குப்பம், சுண்ணாம்பு குளம், ஓபசமுத்திரம் உட்பட பல கிராமங்களில், 27 தற்காலிக பாதுகாப்பு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.கும்மிடிப்பூண்டி பகுதியில், கடலோர பகுதிகளில் வசிக்கும் மக்களை, அவசர காலத்தில் பாதுகாக்க, தலையாரி பாளையம், வல்லமேடுகுப்பம் கிராமங்களில் உள்ள பேரிடர் பாதுகாப்பு மையங்கள், அனைத்து வசதிகளுடன், தயார் நிலையில் உள்ளனர்.மேற்கண்ட பேரிடர் பாதுகாப்பு மையங்களை, திருவள்ளூர் கலெக்டர் பொன்னையா, நேற்று ஆய்வு செய்து, தாசில்தார் கதிர்வேல், பி.டி.ஓ., வாசுதேவன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.கும்மிடிப்பூண்டி வட்டார மருத்துவ அலுவலர் கோவிந்தராஜ் தலைமையில், மூன்று மருத்துவ குழுக்கள் தயார் நிலையில் உள்ளன.கட்டுப்பாட்டு அறை திறப்புதிருவள்ளூர் மாவட்டத்தில் பொதுமக்கள், பெருமழை தொடர்பாக புகார்கள் தெரிவிக்க, மாவட்ட பேரிடர் தடுப்பு கட்டுப்பாட்டு அறைக்கான கட்டணமில்லா தொலைபேசி எண் - 1077, 24 மணி நேரமும் இயங்கி வருகிறது. மேலும், 044 -- 2766 4177, -2766 6746 ஆகிய தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டும், தகவல் தெரிவிக்கலாம். 94443 17862 மற்றும் 93840 56215 ஆகிய எண்ணிற்கு, 'வாட்ஸ் ஆப்' மூலம் புகார் அனுப்பலாம்.2,500 மணல் மூட்டைகள்கடம்பத்துார் ஒன்றிய அலுவலகத்தில், 2,500 மணல் மூட்டைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மழைநீர் செல்ல வசதியாக கால்வாய்களை துார் வாரி சீரமைக்கவும், ஊராட்சி நிர்வாகத்திற்கு, ஒன்றிய அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.