விண்ணப்பம் வரவேற்புதிருவள்ளூர்: திருவள்ளுர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் விடுதிகளில், காலியாக உள்ள, 11 சமையலர், 4 துப்புரவாளர் பணிக்கு, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.வயது வரம்பு, 18 - 35. தகுதியானோர், திருவள்ளூர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் விண்ணப்பத்தினை பெற்று, பூர்த்தி செய்து, டிச., 4ம் தேதிக்குள் அனுப்புமாறு, கலெக்டர் பொன்னையா கேட்டுக் கொண்டுள்ளார்.
விழிப்புணர்வு பிரசாரம் திருவள்ளூர்: உலக நவீன கருத்தடை இருவார விழா, கடந்த, 21ம் தேதி துவங்கி, டிச.,4ம் தேதி வரை நடக்கிறது. இதையொட்டி, விழிப்புணர்வு பிரசார வாகனத்தினை, திருவள்ளூர் கலெக்டர் பொன்னையா, துவக்கி வைத்தார்.பின் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், 'ஆண்களுக்கு, நவீன கத்தியில்லா மற்றும் தழும்பில்லா நிரந்தர கருத்தடை முகாம், அனைத்து அரசு மருத்துவமனை மற்றும் வட்டார சுகாதார மையங்களிலும் மேற்கொள்ளப்படும். கடந்த ஆண்டு, 99 பேருக்கு, கருத்தடை சிகிச்சை செய்யப்பட்டது.'இந்த இருவார சிறப்பு முகாம்களில், 22 - 60 வயது உடைய, ஒரு குழந்தையாவது உள்ளவர்களுக்கு, கருத்தடை சிகிச்சை அளிக்கப்படும்' என்றார்.
துாய்மை பணியாளர்களுக்கு சீருடை திருப்போரூர்: திருப்போரூர் பேரூராட்சியில், 15 வார்டுகள் உள்ளன. 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இப்பேரூராட்சியில், ஒப்பந்தம் அடிப்படையில், 52 துாய்மை பணியாளர்கள் பணிபுரிகின்றனர்.இவர்கள், வணிக கடைகள், பொது இடம், குடியிருப்பு வீடுகள் என, அனைத்து இடங்களில் உள்ள குப்பைகளை சேகரித்து அப்புறப் படுத்துகின்றனர்.இவர்கள் பணியை ஊக்குவிக்கும் வகையில், அவர்களுக்கு, ராமானுஜம் சோசியல் சர்வீஸ் சொசைட்டி சார்பில், சீருடை வழங்கும் விழா, நேற்று நடந்தது. திருப்போரூர் பேரூராட்சி செயல் அலுவலர் சதீஷ்குமார் தலைமை வகித்து, 52 பேருக்கு, சீருடை, ரெயின்கோட், கையுறை, சோப்பு ஆகியவற்றை வழங்கினார்.
மாணவிக்கு கல்வி உதவிகாஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அடுத்த, அய்யங்கார் குளம் பகுதியில் வசிக்கும், நெசவாளர் குடும்பத்தைச் சேர்ந்த இந்திராதேவி, அரசு பள்ளியில் படித்து, 'நீட்' தேர்வில் வெற்றி பெற்றார்.அவருக்கு, சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லுாரியில் இடம் கிடைத்தது. அவரை பாராட்டி, காஞ்சிபுரத்தில் திருமுருக கிருபானந்தவாரியார் அறக்கட்டளை சார்பில், அதன் நிர்வாகிகள் கண்ணன், சுடர்மணி ஆகியோர், கல்வி உதவி தொகை வழங்கினர்.வரும் 30ல் சங்காபிஷேகம் திம்மராஜம்பேட்டை: வாலாஜாபாத் அடுத்த, திம்மராஜம்பேட்டை கிராமத்தில், ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில், பர்வதவர்த்தினி சமேத ராமலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது.இக்கோவிலில், கார்த்திகை மாத மூன்றாவது சோமவார தினத்தை முன்னிட்டு, நவ., 30ம் தேதி, 108 சங்காபிஷேகம் நடைபெற உள்ளது.இதை முன்னிட்டு, மாலை, 4:00 மணிக்கு, சங்கல்பம், தொடர்ந்து, சிறப்பு ஹோமம் மற்றும் கலசாபிஷேகம், தீபாராதனை நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகம் செய்துள்ளது.அரசு நிலம் மீட்க மறியல்மதுராந்தகம்: மதுராந்தகம் ஒன்றியம், கூடலுாரில், குடியிருப்புகளில் அருகாமையில், 2 ஏக்கர் பரப்பில், அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலம் உள்ளது. இந்த நிலத்தின் ஒரு பகுதியை, அதே பகுதியைச் சேர்ந்த தனி நபர்கள் சிலர் ஆக்கிரமித்து வைத்துள்ளதாக கூறப்படுகிறது.இந்நிலையில், அரசு நிலம் ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி, பொதுமக்கள் நேற்று, மதுராந்தகம்- - எண்டத்துார் சாலையில், மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேல்மருவத்துார் போலீசார் சமரசத்தை அடுத்து, அவர்கள் கலைந்தனர்.