ஆதிபுரீஸ்வரருக்கு தைலாபிஷேகம் கார்த்திகை தீப உற்சவத்திற்கு ஏற்பாடு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 நவ
2020
22:07

சென்னை : திருவொற்றியூர் தியாகராஜசுவாமி கோவிலில், கார்த்திகை தீப உற்சவத்தை முன்னிட்டு, ஆதீபுரீஸ்வரருக்கு தைலாபிஷேகம் நடக்கிறது.



திருவொற்றியூரில் அமைந்துள்ளது வடிவுடையம்மன் உடனுறை தியாகராஜ சுவாமி கோவில். மிகவும் பழமை வாய்ந்த இக்கோவிலில், மூலவராக ஆதிபுரீஸ்வரர் அருள் பாலிக்கிறார். இக்கோவிலில், ஆண்டுதோறும் மூலவர் கவசம் திறந்து, தைலாபிஷேகம் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு, ஆதிபுரீஸ்வரர் கவசம் திறந்து, புனுகு சாம்பிராணி, தைலாபிஷேகம், மகா அபிஷேகம், 29ம் தேதி மாலை, 6:00 மணியில் இருந்து, 7:00 மணிக்குள் நடக்கிறது. தொடர்ந்து, நவ., 30, டிச., 1 ஆகிய இரு நாட்களிலும் காலை, 6:00 மணி முதல் இரவு, 8:00 மணிவரை கவசமின்றி சுவாமி தரிசனம் செய்யலாம்.



இதையடுத்து, டிச., 1ம் தேதி இரவு, 8:00 மணிக்கு நடக்கும் அர்த்தஜாம பூஜைக்கு பின், மீண்டும் கவசம் அணிவிக்கப்படுகிறது. இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை, கோவில் உதவி கமிஷனர் சித்ராதேவி செய்து வருகிறார். கொரோனா காலம் என்பதால், அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து பாதுகாப்பு, முன்னேற்பாடுகளை செய்து வருகிறது.கட்டுப்பாடுகள்l விழாவிற்கு வரும் வெளியூர் பக்தர்கள், 72 மணி நேரத்திற்கு முன், கொரோனா பரிசோதனை எடுத்து, அதன் அறிக்கையுடன் வரவேண்டும்l பக்தர்கள் ஆதார் அட்டை நகல் கொண்டு வர வேண்டும்.



முக கவசம் கட்டாயம்l கர்ப்பிணி பெண்கள், 65 வயதிற்கு மேற்பட்டவர்கள், நோயாளிகள், 10 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் வருகை புரிவதை தவிர்க்க வேண்டும்l நோய் அறிகுறி இல்லாதவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்l சமூக இடைவெளியுடன் வரிசை, உள் நுழைவு, வெளியேற தனித்தனி வழிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுl அர்ச்சனை, அமர்வு தரிசனம் கிடையாது. பிரசாதங்கள் டப்பாக்களில் வினியோகம் செய்யப்படும்l பக்தர்கள் வசதிக்காக, 'ஆன்-லைன்' விரைவு தரிசன கட்டண சீட்டு, www.tnhrce.gov.in என்ற இணைய தள முகவரியில் முன்பதிவு செய்யலாம். நேரடியாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X