சென்னை : 'நிவர்' புயலால், சென்னையில் புறநகர் மின்சார ரயில் போக்குவரத்து, இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது.
நிவர் புயல் தீவிரமடைந்து வருவதால், இன்று காலை, 10:00 மணியில் இருந்து, மறு அறிவிப்பு வரும் வரை, சென்னையில் புறநகர் மின்சார சிறப்பு ரயில் போக்குவரத்து அனைத்தும், ரத்து செய்யப்பட்டன.பலத்த மழையின் காரணமாக, நேற்று மாலை, 3:30 மணியில் இருந்து, புறநகர் மின்சார சிறப்பு ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டதால், பயணியர் அவதிக்கு உள்ளாகினர். இன்று காலை, 10:00 மணி வரை, வானிலை மாற்றத்துக்கு ஏற்ப, புறநகர் மின்சார சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் எனவும், தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.