திருவாடானை : ராமநாதபுரம் மாவட்டத்தில் 2019-20ம் ஆண்டிற்கான பயிர்காப்பீடு திட்டத்தில் பிரீமியதொகை நவ.1 முதல் 30 வரை செலுத்தலாம் என்று அறிவிக்கபட்டது.
திருவாடானை தாலுகாவில் பயிர் காப்பீடு செய்வதில்விவசாயிகள் ஆர்வமாக ஈடுபட்டுள்ளனர். இ சேவை மையம் மற்றும் கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் கூட்டம் அதிகமாக உள்ளது.நெட்வொர்க் கிடைக்காததால் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியதுள்ளது. இன்னும் சில நாட்களே இருப்பதால் திருவாடானை, தொண்டி ஆகிய ஊர்களில் உள்ள இ சேவை மையங்களில் விவசாயிகள் பல மணி நேரம் காத்திருந்து பதிவு செய்கின்றனர்.