சாயல்குடி : சாயல்குடி அருகே மூக்கையூர், மேலமுந்தல்,கீழமுந்தல், மாரியூர் உள்ளிட்ட மன்னார் வளைகுடா கடற்கரைப் பகுதிகளில் எப்போதும் பேரலைகள் எழும்புவது வழக்கம்.
நேற்று பிற்பகல் முதல் மாலை வரை கடற்கரையில் இருந்து கடல்நீர் 100 மீ., துாரத்திற்கு உள் வாங்கியது.மீனவர் கூறியதாவது:2004 சுனாமி கால நேரத்தில் இதுபோன்று கடல்நீர் உள்வாங்கியிருந்தது. தற்போது நிவர் புயல் கரையை கடக்க உள்ள நிலையில் தற்போது கடல்நீர் அலைகள் ஏதும் இன்றி அமைதியாக வழக்கத்துக்கு மாறாக காட்சியளித்தது. இதனால் மீனவர்கள் தங்களுடைய நாட்டுப்படகு, வல்லம், சிறிய வத்தைகளை பாதுகாப்பாக கரைப்பகுதிகளில் நிலைநிறுத்தியுள்ளனர் என்றார்.