ராமநாதபுரம்:ராமநாதபுரம் மாவட்டம் பெரியபட்டினத்தில் அனுமதியின்றி இளைஞர்களுக்கு பயிற்சி முகாம் நடத்திய பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு மீது போலீசார் வழக்கு பதிந்தனர்.
பெரியபட்டினம் செய்யது ஒலியுல்லா தர்ஹா அருகே செய்யது ஹமீது என்பவரின் இடத்தில் அனுமதி இன்றி கொட்டகை அமைத்து 32 பேர் தங்கி இருந்தனர்.அவர்களிடம் கீழக்கரை டி.எஸ்.பி., முருகேசன் தலைமையிலான தனிப்படையினர் நடத்திய விசாரணையில், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு சார்பில் மாவட்ட தலைவர் முகம்மது மன்சூர் தலைமையில் 32 பேருக்கு நவ.,20 முதல் 24 வரை 'பிகினர்ஸ் கேம்ப்' 32 என்ற பெயரில் முகாம் நடத்தியது தெரிந்தது.
எஸ்.பி., கார்த்திக் கூறுகையில், கொரோனா பரவல் காலத்தில் அனுமதியின்றி முகாம் நடத்தி இளைஞர்களுக்கு மதம் சார்ந்த பயிற்சி, உடல் திறன் சார்ந்த பயிற்சி உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளை அளித்துள்ளனர். இது தொடர்பாக பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது, என்றார்.