சங்கராபுரம் : சங்கராபுரம் போலீஸ் நிலையத்தை பா.ஜ.,வினர் முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது.
சங்கராபுரம் அடுத்த கொசப்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் ராமசாமி மகன் பிரபு, 36; கொசப்பாடி பா.ஜ., கிளைத் தலைவர். இவர், சில நாட்களுக்கு முன் வி.சி., கட்சித் தலைவர் திருமாவளவன் குறித்து முகநுாலில் தவறாக வந்ததை, ஷேர் செய்ததாகவி.சி., கட்சியினர் சங்கராபுரம் போலீசில் புகார் அளித்தனர்.அதன்பேரில், போலீசார் வழக்குப் பதிவு செய்து, நேற்று முன்தினம் பிரபுவை கைது செய்தனர்.
இதனைக் கண்டித்து பா.ஜ., மாவட்ட தலைவர் பாலசுந்தரம் தலைமையில், ஒன்றிய தலைவர் செந்தில், மாவட்ட செயலாளர் செல்வகணபதிஉட்பட 50க்கும் மேற்பட்ட பா.ஜ.,வினர்நேற்று மாலை 6:10 மணிக்கு போலீஸ் நிலையத்தைமுற்றுகையிட்டு கோஷமிட்டனர்.அவர்களுடன்சப் இன்ஸ்பெக்டர் திருமால் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து அனைவரும் 6:45 மணிக்கு கலைந்து சென்றனர். இதனால், அங்கு பரபரப்பு நிலவியது.