விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில், நிவர் புயல் முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கையாக பொதுமக்களுக்கான பஸ் சேவை நிறுத்தம், கடைகள் இயங்காது மற்றும் மக்கள் வெளியே வர வேண்டாம் என கலெக்டர் அண்ணாதுரை உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்த கலெக்டர் கூறியதாவது: சென்னை -காரைக்கால் இடையே நிவர் புயல் கரையை கடப்பதால் இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.இதையோட்டி தமிழக அரசு உத்தரவின் பேரில், விழுப்புரம் மாவட்டத்தில் நிவர் புயல் முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கை மற்றும் மக்களின் நலனை யொட்டி, நேற்று மதியம் 1.00 மணி முதல் மறு உத்தரவு வரும் வரை பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
இன்று (25ம் தேதி) அத்தியாவசிய பொருட்களுக்கான கடைகள் உட்பட அனைத்து கடைகளும் திறக்கப்படாது. இன்று பொதுமக்கள் யாரும் வெளியே வராமல் மாவட்ட நிர்வாகத்தின் மறு அறிவிப்பு வரும் வரை தங்கள் வீட்டிற்குள்ளேயே பாதுகாப்பாக இருக்க வேண்டும் என கலெக்டர் அண்ணாதுரை உத்தரவிட்டுள்ளார்.