கண்டாச்சிபுரம் : கண்டாச்சிபுரம் அடுத்த கடையம் கிராமத்தில் கள்ளச்சாராயம் விற்ற 3 பெண்கள் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.
கண்டாச்சிபுரம் அடுத்த கடையம் கிராமத்தில் கள்ளச்சாராயம் விற்பதாக வந்த தகவலையடுத்து,சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் தலைமையிலான போலீசார் கடையம் கிராமத்தில் சோதனை செய்தனர்.அப்போது இதே ஊரைச்சேர்ந்த கிருஷ்ணன்(76), வள்ளியம்மை (59), ஆனந்தாய்(58), சாந்தி (42) ஆகிய நான்குபேரும், தங்களது வீட்டின் பின் பகுதியில் சாராயம் விற்றுக் கொண்டிருந்ததை கண்டுபிடித்தனர்.கண்டாச்சிபுரம் போலீசார் வழக்குப் பதிந்து நான்கு பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்த சாராயத்தை பறிமுதல் செய்தனர்.