ராமேஸ்வரம்:'நிவர்' புயலால் ராமேஸ்வரம் அருகே பாம்பனில், இரண்டாவது நாளாக கடல் கொந்தளித்து, ராட்சத அலைகள் எழுந்தன.'வங்க கடலில் உருவான நிவர் புயலால், நவ., 23ல் பாம்பன் துறைமுக அலுவலகத்தில், 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு, மீனவர்கள் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டது.
'இப்புயல் எச்சரிக்கையால், இரண்டாவது நாளான நேற்றும், பாம்பனில் கடல் கொந்தளித்து, 4 முதல், 6 அடி உயரத்திற்கு ராட்சத அலைகள், ஆக்ரோஷமாக கரையில் மோதின. பாம்பன் வட கடற்கரையில், ஒரு மீனவரின் வீட்டு சுவர் இடிந்து விழுந்தது.ராமேஸ்வரம் பகுதியில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதால், மீட்பு பணியில், இந்திய கடலோர காவல் படை வீரர்கள், பேரிடர் மீட்பு குழு தயார் நிலையில் உள்ளதாக, வருவாய் துறையினர் தெரிவித்தனர்.