விழுப்புரம் : கடன் வாங்கிய தகராறில், இளம்பெண்ணை தாக்கிய நபர் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.
கிளியனுார் அடுத்த ஒழிந்தியாம்பட்டை சேர்ந்தவர் தனசேகர் மனைவி பரமேஸ்வரி, 35; இவர், அதே பகுதியை சேர்ந்த குமார், 40; என்பவரிடம், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் ரூ.1.40 லட்சம் கடன் வாங்கினார். இதையடுத்து, மூன்று மாதத்தில் 40 ஆயிரம் ரூபாயை பரமேஸ்வரி திரும்ப கொடுத்துள்ளார்.இந்நிலையில், பரமேஸ்வரி மீதமுள்ள ஒரு லட்சத்திற்கு வட்டியும், அசலும் கொடுக்காமல் இருந்துள்ளார். இதனால், கடந்த 22ம் தேதி பரமேஸ்வரியின் வீட்டினுள் நுழைந்த குமார், அவரை திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார்.இது குறித்த புகாரின்பேரில், குமார் மீது கிளியனுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.