மாவட்டத்தில் புயல் பாதிப்பை துரிதமாக சரிசெய்ய... அறிவுறுத்தல்! அதிகாரிகளுடன் கூடுதல் தலைமை செயலர் ஆய்வு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 நவ
2020
00:23

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் புயலுக்கு பின் ஏற்படும் பாதிப்புகளை உடனுக்குடன் சரிசெய்ய அனைத்துத்துறை அதிகாரிகள் துரிதமாக செயல்பட வேண்டும் என மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் அரசு கூடுதல் தலைமை செயலர் (நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை) ஹர்மந்தர் சிங் அறிவுறுத்தியுள்ளார்.



விழுப்புரம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், நிவர் புயல் முன்னெச்சரிக்கை பாதுகாப்பு பணிகள் மேற்கொள்வது குறித்த ஆய்வுக்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு, மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் அரசு கூடுதல் தலைமை செயலர் (நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை) ஹர்மந்தர் சிங் தலைமை தாங்கினார். இதில், விழுப்புரம் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள நிவர் புயல் முன்னெச்சரிக்கை பாதுகாப்பு பணிகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடன் விரிவாக ஆய்வு மேற்கொண்டார்.



பின், அவர் பேசியதாவது; விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த அனைத்துத்துறை அரசு அலுவலகத்தில் தேவையான பணியாளர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும். அவசரகால தேவைக்கேற்ப மாவட்ட நிர்வாகம் ஆலோசனையின்படி செயல்பட வேண்டும். தீயணைப்புத்துறை, காவல்துறை, நெடுஞ்சாலைத்துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை, மின்சாரத்துறை உள்ளிட்ட துறைகள் முழுவீச்சில் ஈடுபட்டு புயல் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும். மேலும் புயலுக்கு பின் ஏற்படும் பாதிப்புகளை உடனுக்குடன் சரிசெய்ய துரிதமாக செயல்பட வேண்டும் என்றார்.



இதையடுத்து, கலெக்டர் அண்ணாதுரை கூறுகையில், மாவட்ட நிர்வாகம் சார்பில் நிவர் புயல் முன்னெச்சரிக்கை பாதுகாப்பு பணிகள், அடிப்படை கட்டமைப்புகள், மாவட்டத்தில் உள்ள முக்கிய நீர் நிலைகள், மாவட்டத்தின் கடலோர எல்லைப்பகுதிகளில் புயல் பாதுகாப்பு நடவடிக்கைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக கூறினார்.இதை தொடர்ந்து, எஸ்.பி., ராதாகிருஷ்ணன் கூறுகையில், காவல்துறை சார்பில் கடலோர பகுதிகளில் அமைந்துள்ள ஒவ்வொரு கிராமங்களுக்கும் 3 தலைமை காவலர்கள் வீதம் 19 கிராமங்களில் போலீசார் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். கடலோர பகுதிகளில் பேரிடர் கால சிறப்பு மீட்புக்குழுக்கள் தயார்நிலையில் உள்ளனர் என்றார்.



இதையடுத்து, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மகேந்திரன் கூறுகையில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் அனைத்து கிராமங்களிலும் தேவையான அளவு பிளிச்சிங் பவுடர் இருப்பில் உள்ளது. குடிநீர் பற்றாக்குறை ஏற்படாத வகையில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளில் முன்னதாக குடிநீரை தேக்கி வைக்கப்பட்டுள்ளது. அவசர கால தேவைக்கேற்ப துாய்மை பணியாளர்களை தயார் நிலைபடுத்த ஊராட்சி செயலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.



மேலும், பேரிடர் காலத்திற்கு தேவையான ஜெனரேட்டர் வசதி, நீர் இறைக்கும் இயந்திரங்கள், மீட்புப்பணிகளுக்காக பொக்லைன் இயந்திரங்கள், இயந்திரங்கள் இயக்க தேவையான எரிபொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகள் தயார் நிலையில் உள்ளன என்றார்.



இதேபோன்று, மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து துணை மின் நிலையங்களிலும் 15 பேர் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. டிரான்ஸ்பார்மர், மின்கம்பங்கள், மின்கடத்திகள் உள்ளிட்டவை போதுமான அளவு இருப்பில் உள்ளது. மேலும், மின் துண்டிப்புகள் ஏற்படும்போது அதனை சரிசெய்ய ஏதுவாக பணியாளர்கள் அனைவரும் பணியிலிருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.



கால்நடை பராமரிப்புத்துறை சார்பில், கால்நடைகளுக்கு தேவையான அனைத்து மருந்துகளும் தயார் நிலையில் உள்ளதாகவும், கால்நடை மருத்துவர்கள், செவிலியர்கள், உதவியாளர்கள் அனைவரும் தயார் நிலையில் இருக்க அறவுறுத்தப்பட்டுள்ளது. மூன்று நடமாடும் கால்நடை வாகனங்கள் கடலோர எல்லைப்பகுதிகளில் இயக்கப்பட்டுள்ளது.



சுகாதாரத்துறை சார்பில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் என 12 குழுக்கள் மாவட்டம் முழுவதும் புயல் பாதுகாப்பு பணிகளில் பொதுமக்களுக்கு அவசர கால உதவி, மருத்துவ உதவி வழங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. புயல் பாதுகாப்பு மையங்களில் போதுமான அளவு மருத்துவ உபகரணங்கள், முகக்கவசங்கள், கை கழுவும் திரவம் உள்ளிட்டவை இருப்பில் உள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.



ஆய்வு கூட்டத்தில், டி.ஐ.ஜி., எழிலரசன், சென்னை பயிற்சி டி.ஐ.ஜி., சத்தியபிரியா, கூடுதல் கலெக்டர் ஸ்ரேயா பி சிங் உட்பட அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 

Advertisement
மேலும் விழுப்புரம் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X