விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அமைப்புசாரா தொழிலாளர்கள், அமைப்புசாரா கட்டுமானம் மற் றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் நல வாரியங்களில் உறுப்பினராக பதிவு செய்ய வேண்டும்.க
லெக்டர் அண்ணாதுரை செய்திக்குறிப்பு:அமைப்புசாரா தொழில்களில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் நலனை பாது காக்கவும், அவர்களுக்கு சமூக பாதுகாப்பு அளிக்கவும் 17 தொழிலாளர் நல வாரியங்கள் ஏற்படுத்தப்பட்டு தொழிலாளர் துறையின் கீழ் செயல்பட்டு வருகிறது. மேலும், அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியங்களில் பதிவு பெற்ற உறுப்பினர்களுக்கு கல்வி, திருமணம், மகப்பேறு, விபத்து மரண உதவி, இயற்கை மரண உதவி, ஓய்வூதியம் போன்ற நலத்திட்ட உதவி கள் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நல வாரியங்களில் புதிதாக பதிவு செய்யவும், ஏற்கனவே நல வாரியத்தில் பதிவு செய்துள்ள உறுப்பினர்கள் தங்களது பதிவை புதுப்பித்து கொள்ளவும் www.tnuwwb.in என்ற இணையதளம் மூலம் சேவை வழங்கப்படுகிறது.விழுப்புரம் மாவட்டத்தில் கல் உடைப்போர், கட்டட தொழிலாளி, பெயிண் டர் என மொத்தம் 53 வகையான கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் மற்றும் பட்டாசு, தீப்பெட்டி, தையல், விசைத்தறி, கைத்தறி மற்றும் வீட்டுப்பணி உட்பட 60 வகையான தொழில்களில் ஈடுபட்டுள்ள உடல் உழைப்பு தொழிலாளர்கள் அனைவரும் www.tnuwwb.in என்ற இணையதளம் மூலம் நல வாரியங்களில் உறுப்பினராக பதிவு செய்ய வேண்டும்.மேலும், இணையதளம் வழியாக பதிவு மேற்கொள்ள வயது சான்று, ஸ்மார்ட் கார்டு, ஆதார் அட்டை, சாதி சான்றிதழ், வங்கி கணக்கு போன்ற ஆவணங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். தகுதி வாய்ந்த தொழிலாளர்களுக்கு 30 நாட்களுக்குள் பதிவு எண் விவரம் அவர்களின் மொபைல் எண்ணுக்கு குறுஞ்செய்தியாக அனுப்பி வைக்கப்படும். அந்த பதிவு அட்டையை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.எனவே, மாவட்டத்தில்உள்ள அமைப்புசாரா தொழிலாளர்கள் பதிவு செய்து அரசின் நலத்திட்டங்களை பெற்று பயன்பெறலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.