கடலுார் : நிவர் புயல் சின்னம் காரணமாக மீட்பு பணிகள் மேற்கொள்ள கடலுார் நகராட்சி நிர்வாகம் தயார் நிலையில் உள்ளது.
நிவர் புயல் சின்னம் காரணமாக மீட்பு பணிகளை மேற்கொள்ள கடலுார் நகராட்சி நிர்வாகம் தயார் நிலையில் உள்ளது.மரங்ளை அகற்ற 11 ஜே.சி.பி., இயந்திரங்கள்; 12 டிராக்டர்கள், தேங்கியுள்ள மழை நீரை வெளியேற்ற 3 ராட்சத மோட்டார் உட்பட 17 மோட்டார்கள், மின் தடை ஏற்பட்டால் திருவந்திபுரம், கேப்பர் மலை, சாவடி பகுதிகளில் அமைந்துள்ள அனைத்து தலைமை நீரேற்று நிலையங்களில் தண்ணீர் ஏற்ற 3 ராட்சத ஜெனரேட்டர் உட்பட 14 ஜெனரேட்டர்கள் தயார் நிலையில் உள்ளன.
பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க, நீர்தேக்க தொட்டிகளை பிளீச்சிங் பவுடரால் சுத்தம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கழிவுநீர் வடிகாலில் தேங்கிய குப்பைகளை அகற்றும் பணியில் நகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.புயல் பாதுகாப்பு மையங்களில் தங்கும் மக்களுக்கு கொரோனா தொற்று பரவாமல் இருக்க கிருமிநாசினி, முகக்கவசம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மீட்பு நடவடிக்கைகளுக்கு திருச்சி மாநகராட்சியில் இருந்து 50 துப்புரவு பணியாளர்கள் தேவையான வாகனங்களுடன் வந்துள்ளனர்.