கிள்ளை : பரங்கிப்பேட்டை பகுதியில் கடல் சீற்றம் நேற்று அதிகமாக காணப்பட்டதால், மீனவர்கள் படகுகளை, பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர்.
வங்க கடலில் உருவாகியுள்ள 'நிகர்' புயல் சென்னை மாமல்லபுரம் - காரைக்கால் இடையே, கரையை கடக்கும்என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனால், பரங்கிப்பேட்டை மற்றும் கிள்ளை முடசல் ஓடைகடற்கரையோர கிராமங்களை சேர்ந்த மீனவர்கள், இரண்டு நாட்களாக மீன் பிடிக்க கடலுக்குசெல்லவில்லை.
நேற்று முதல் பரங்கிப்பேட்டை மற்றும் கிள்ளை கடல் பகுதியில், காற்றுடன், கடல் சீற்றம் அதிகமாகஇருந்தது.பரங்கிப்பேட்டை கடற்கரையோர கிராமங்களை சேர்ந்த மீனவர்கள், படகுகளை, கிள்ளை முடசல் ஓடை மீன் இறங்கு தளம், பரங்கிப்பேட்டை அன்னங்கோவில் மீன் இறங்கு தளம் உள்ளிட்ட இடங்களில் பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர்.