பொள்ளாச்சி:குடிநீர் திட்டப்பணிகளுக்கு முன்னுரிமை கொடுத்து, பணிகளை விரைந்து முடிக்க ஊராட்சி தலைவர், செயலர்களுக்கு ஒன்றிய கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.பொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்தில், ஊராட்சி தலைவர்கள், செயலாளர்கள் பங்கேற்ற அவசர கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு, பி.டி.ஓ.,க்கள் விவேகானந்தன், அசோகன் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில், 'ஜல்ஜீவன்' திட்டப்பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். திட்டம் செயல்படுத்தாத ஊராட்சிகளில், குடிநீர் திட்ட பணிகளுக்கு முக்கியத்துவம் வழங்கி, பணிகளை மேற்கொள்ள வேண்டும் என, ஆலோசனை வழங்கப்பட்டது.கூட்டத்தில், வடக்கு ஒன்றியத்தை சேர்ந்த, 39 ஊராட்சிகளின் தலைவர்கள் மற்றும் ஊராட்சி செயலாளர்கள் பங்கேற்றனர்.