உடுமலை:ஊரடங்கு தளர்வுகளுக்கு பின், மத்திய அரசின் ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ், பல்வேறு பணிகள் முழுவீச்சில் நடந்துள்ளன. இதன் மூலம் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் காக்கப்படுவதால் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் கூறியதாவது:ஊரடங்கை தொடர்ந்து, இத்திட்டத்தின் கீழ், தொழிலாளருக்கான ஊதியம், 254 ரூபாயாக உயர்த்தப்பட்டது. திருப்பூர் மாவட்டத்தில் பாசன திட்டங்கள், வாய்க்கால் துார்வாருதல், துாய்மைப்பணிகள் என பலவகைப் பணிகளுக்கு இத்தொழிலாளர்கள் பயன்படுத்தப்படுகின்றனர்.கிராம ஊராட்சிகளுக்கான, மகளிர் சுய உதவிக்குழுவினருக்கான கட்டடங்கள், அங்கன்வாடிகள், உணவு தானிய இருப்பு கிட்டங்கி கட்டுதல், இயற்கை உரங்கள் மற்றும் அறுவடைக்கு பின் விளைபொருட்களை சேமிப்பதற்கான நிலையான உள்கட்டமைப்பு உருவாக்குதல், கிராம சந்தைகள் கட்டுதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.தனிநபர் திட்டங்களுக்காக ஆடு, மாடு, கோழிக்கொட்டகை அமைத்தல், கால்நடைகளுக்கான தண்ணீர் தொட்டி கட்டும் பணியிலும் இவர்கள் ஈடுபட்டுள்ளனர். பணி தொடர்ந்து கிடைப்பதால், தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.தொழிலாளர்கள் கூறுகையில், 'ஊரடங்கு தளர்வுக்குப்பின், இப்பணிகள் பலரது வாழ்வாதாரத்தை காத்துள்ளது. நிர்ணயிக்கப்பட்ட அளவைக்காட்டிலும், ஊதியம் குறைத்து வழங்கப்படுவதாக கூறப்படும் புகார்களை களைய வேண்டும்' என்றனர்.