கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு, பள்ளிவாசல் வீதியை சேர்ந்த டிரைவர் சாந்துமுகமது, 40, என்பவர் நேற்று முன்தினம் மாலை, கோவை - பொள்ளாச்சி ரோட்டில் நடந்து சென்றார்.அப்போது, ஆட்டோ ஸ்டாண்ட் அருகே, கீழே கிடந்த பிளாஸ்டிக் பார்சலை எடுத்து பிரித்துள்ளார். அதில் பணம் இருப்பது தெரியவந்தது.உடனடியாக, கிணத்துக்கடவு இன்ஸ்பெக்டர் முரளியை சந்தித்து கீழே கிடந்த பார்சலை ஒப்படைத்தார். இதனை பிரித்து பார்த்த போலீசார், அதில் மூன்றாயிரம் ரூபாய் பணம் இருப்பதை உறுதி செய்தனர். கீழே கிடந்து பார்சலை எடுத்து வந்து மனித நேயத்துடன் ஒப்படைத்த டிரைவர் சாந்துமுகமதுவை போலீசார் பாராட்டினர்.போலீசார் கூறுகையில், ''பணத்தை தொலைத்த நபர்கள் உரிய அடையாளத்தை கூறி, போலீஸ் ஸ்டேஷனில் பெற்று கொள்ளலாம்.'' என்றனர்.