தயார் நிலையில் பேரிடர் மீட்பு குழு | திருப்பூர் செய்திகள் | Dinamalar
தயார் நிலையில் பேரிடர் மீட்பு குழு
Advertisement
 

பதிவு செய்த நாள்

25 நவ
2020
01:55

உடுமலை:'நிவர்' புயலால் பாதிப்பு இருக்காது என்றாலும், தாலுகா அளவிலான பேரிடர் மேலாண்மை குழு தேவையான உபகரணங்களுடன் தயார்நிலையில் இருக்க வேண்டும் என, திருப்பூர் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.வங்கக்கடலில் உருவாகியுள்ள 'நிவர்' புயல் காரணமாக, கடலோர மாவட்டங்களில் கனமழையும், மற்ற மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.புயல் கரையை கடக்கும்போது, உள்மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளது. புயல் குறித்து முன்னறிவிப்பு செய்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க அவசர உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.திருப்பூர் மாவட்ட நிர்வாகம், புயல் உள்ளிட்ட இயற்கை சீற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளது.தாலுகா வாரியாக, அரசுத்துறை அதிகாரிகள் தயார் நிலையில் இருக்க வேண்டும். மழை வெள்ளத்தால் பாதிப்பு ஏற்படும், தாழ்வான பகுதி மக்களை பாதுகாப்பாக இருக்க வைக்க வேண்டும்.மழைப்பொழிவு, அணைகளுக்கு நீர் வரத்து, குளம், குட்டைகளின் நீர் இருப்பு மற்றும் கரைகளின் உறுதித்தன்மை குறித்து தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். மழை வெள்ளத்தால், உயிர் சேதம் ஏற்படாமல் தடுக்க வேண்டும்.புயல் வெள்ளத்தால், பயிர் சேதம், கால்நடைகள் சேதமானால், உடனுக்குடன் ஆய்வு செய்து, உரிய நிவாரணம் வழங்கப்பட வேண்டும். தேவையான உபகரணங்களுடன், தீயணைப்பு மற்றும் மீட்புப்பணி வீரர்கள், தாலுகா அளவிலான பேரிடர் மேலாண்மை குழுவினர் தயார் நிலையில் இருக்க வேண்டும்.இவ்வாறு, மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X