ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்ட ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பு சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஊராட்சி தலைவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பதவியேற்று ஓராண்டு முடியும் நிலையில், கிராமங்களின் அடிப்படை தேவைகளை கூட நிறைவேற்ற முடியாத நிலையில் நிதி பற்றாக்குறை தொடர் பிரச்னையாக உள்ளது. எனவே ஊராட்சிக்கு வழங்கப்படும் எஸ்.எப்.சி., நிதியை உடனே வழங்க வேண்டும்.தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் வரும் அனைத்து பணிகளையும் மத்திய அரசு வழிகாட்டுதலின் படி ஊராட்சி தலைவர்கள் மூலம் செயல்படுத்த வேண்டும். மத்திய அரசு வழங்கிய 15வது நிதிக்குழு மானியத்தை ஊராட்சியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த மாவட்ட நிர்வாகம் அனுமதிக்க வேண்டும்.
ஊராட்சி வளர்ச்சிப்பணிகளில் ஒன்றிய தலைவர்களின் தலையீட்டை தடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட கூட்டமைப்பு செயலாளர் செந்தில்குமார் தலைமை வகித்தார். தலைவர் சித்ராமருது, பொருளாளர் முகம்மது இக்பால், ஒருங்கிணைப்பாளர் கோகிலா உட்பட 38 பெண் ஊராட்சி தலைவர்கள் பங்கேற்றனர்.