ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டத்தில் நிவர் புயல் பாதிப்பில் இருந்து மக்களை பாதுகாக்க 63 இடங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக கலெக்டர்தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: மாவட்டத்தில் 180 மீனவர் கிராமங்கள் உள்ளன. நிவர் புயலால் கனமழை பெய்து குடியிருப்புகளில் வெள்ளம் புகுந்தால் அங்குள்ள மக்களை பாதுகாப்பாக தங்க வைத்து உணவு, உடை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்க 63 இடங்கள் தயார் நிலையில் உள்ளன. மீனவர்கள் கட்டுமரங்களை கடற்கரையிலும், விசைப்படகுகளை கடலில் இடைவெளி விட்டும்பாதுகாப்பாக நிறுத்த வேண்டும். பயிர் காப்பீடு செய்வதில் கவனம் செலுத்த விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் மழை நீர் தேங்கும் பகுதிகளாக 39 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அங்குஉள்ள மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க அதிகாரிகள் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது, என்றார்.