வேடசந்தூர் : தோட்டத்திற்குள் நடந்து சென்றவர்களை தட்டிக்கேட்ட இளம் பெண்களை தாக்கிய பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
வேடசந்துார் குன்னம்பட்டியை சேர்ந்த விவசாயி ஜெயராம். இவரது மகள் புவனேஸ்வரி 22, எம்.ஏ., பட்டதாரி, இவரது தங்கை சித்ராதேவி 20, பிளஸ் 2 முடித்துள்ளார். இருவரும் அவர்கள் தோட்டத்தில் விவசாய வேலை பார்த்து வந்தனர்.குன்னம்பட்டியைச் சேர்ந்த செல்வி 50, மகாலட்சுமி 50, உள்பட நால்வர் அத்தோட்டத்தின் வழியாக நடந்து சென்றனர். அவர்களை புவனேஸ்வரி இவ்வழியாக செல்லக்கூடாது எனக் கூறி தடுத்துள்ளார்.
வாய் தகராறு ஏற்பட்டதால், செல்வி, மகாலட்சுமி சேர்ந்து, புவனேஸ்வரி, அவரது தங்கை சித்ராதேவியை தாக்கினர். இருவரும் வேடசந்துார் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். வேடசந்துார் போலீசார் தாக்கிய செல்வி, மகாலட்சுமியை கைது செய்தனர்.