குஜிலியம்பாறை : குஜிலியம்பாறை ஒன்றியத்தில் சுப்ரமணிபிள்ளையூர், புளியம்பட்டி, பூசாரிபட்டி உள்ளிட்ட 10 ரயில்வே சுரங்கப்பாதைகளில் மழை நீர் தேங்கி நிற்பதால் பொது மக்கள் அவதிப்படுகின்றனர்.
அதற்கு நிரந்தர தீர்வு கோரி மார்க்சிஸ்ட் சார்பில் பாளையம் ரயில்வே ஸ்டேஷனில் நவ.27 ல் போராட்டம் நடத்த அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இது குறித்து தாசில்தார் சக்திவேலன், ரயில்வே அதிகாரி பாஸ்கர், பி.டி.ஓ., காமராஜ், மார்க்சிஸ்ட் ஒன்றிய செயலாளர் ராஜரத்தினம், எஸ்.ஐ., செல்வராஜ் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடந்தது. மூன்று மாதங்களில் தானாக இயங்கும் மோட்டார் பொருத்தி தேங்கும் தண்ணீரை முறையாக வெளியேற்றுவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.