திண்டுக்கல் : திண்டுக்கல்லில் சமூக பாதுகாப்புத்துறையின் இளைஞர்நீதி குழும விசாரணை காணொலி காட்சியில் மேற்கொள்ள நேற்று துவங்கப்பட்டது.
சமூக பாதுகாப்புத்துறையின் கீழ் 16 மாவட்டங்களில் செயல்பட்டுவரும் இளைஞர்நீதி குழும காணொலி காட்சியில் விசாரணை மற்றும் நீதி வழங்கிடும் முறையை முதல்வர் பழனிசாமி நேற்று துவங்கி வைத்தார். கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள அலுவலகத்தில் துவங்கி வைக்கப்பட்டது. இதன் மூலம் இளம் வயதினரை அந்தந்த பகுதியிலிருந்தே காணொலி வாயிலாக விசாரணை மற்றும் தகவல்களை பெற முடியும். இதில் குழும தலைவர் மற்றும் முதன்மை நீதித்துறை நடுவர் முருகன், ஏ.டி.எஸ்.பி., வெள்ளைச்சாமி, உறுப்பினர்கள் சரவணலட்சுமி, மலர்விழி, ரவீந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.