திண்டுக்கல் : திண்டுக்கல் கூட்டுறவு நிறுவனங்களில் காலிப்பணியிட நேர்முக தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுகிறது.
இணைப்பதிவாளர் முருகேசன் கூறியது: திண்டுக்கல் மத்திய கூட்டுறவு வங்கியில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர், ஊர்தி ஓட்டுநர் ஆகிய பணியிடங்களுக்கு இன்று (நவ.25) முதல் டிச.2 வரை நடக்க இருந்த நேர்முகத்தேர்வு நிர்வாக காரணங்களுக்காக ஒத்தி வைக்கப்படுகிறது. தேர்வு குறித்த விவரம் பின்னர் அறிவிக்கப்படும், என்றார்.