மதுரை : தமிழக அரசு வழங்கும் சமூக நல்லிணக்கத்திற்கான 'கபீர் புரஸ்கார்' விருதுக்கு பொதுமக்கள், இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம்.ரேஸ்கோர்ஸில் உள்ள மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் இதற்கான விண்ணப்பம் பெறலாம். சமுதாயப்பணி குறித்த விவரங்களுடன் பூர்த்தி செய்த விண்ணப்பத்தை டிச., 25 (இன்று) மாலை 5:00 மணிக்குள் ஒப்படைக்க வேண்டும். இத்தகவலை மாவட்ட விளையாட்டு அலுவலர் லெனின் தெரிவித்துள்ளார்.