உசிலம்பட்டி : உசிலம்பட்டி அருகே போடுவார்பட்டியைச் சேர்ந்த காந்தி- ராஜாத்தி தம்பதியருக்கு அன்புராஜன், ரவீந்திரன் என இரண்டு மகன்கள். இதில் அன்புராஜன், தான் திருநங்கையாக இருப்பதால், குடும்பச் சொத்தில் பங்கு தரமறுக்கின்றனர் என உசிலம்பட்டி ஆர்.டி.ஓ., ராஜ்குமாரிடம் புகார் மனு கொடுத்தார்.
விசாரணை நடத்திய ஆர்.டி.ஓ., பிறப்பித்த உத்தரவு: அன்புராஜன் என்ற ஊர்வசிக்கு சொத்தில் அனுபவ உறுதி செய்ய வேண்டியுள்ளது. கூட்டு பட்டாவில் காந்தி மகன் அன்புராஜன் என்று உள்ளதை காந்தி மகன் அன்புராஜன் (எ) ஊர்வசி என திருத்தம் மேற்கொள்ள வேண்டும். ஊர்வசிக்கு 3 ல் 1 பங்கு தர வேண்டும். 3 மாத காலத்திற்குள் பாகப்பிரிவினை பத்திரம் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.