கொட்டாம்பட்டி : கொட்டாம்பட்டி குன்னாரம்பட்டியில் 3 ஏக்கர் 36 சென்ட் பரப்புள்ள பிள்ளை ஏந்தல் ஊருணியை தனிநபர்கள் தென்னந்தோப்பாக மாற்றியதால் 50 ஏக்கர் விளை நிலங்கள் தரிசாக மாறி வருகின்றன.
சமூக ஆர்வலர் கருப்பு கூறியதாவது: நீர் பிடிப்பு பகுதியான பிள்ளை ஏந்தலை ஒரு குடும்பத்தை சேர்ந்த மூவருக்கு வருவாய் துறை அதிகாரிகள் பட்டா கொடுத்துள்ளனர். இதுகுறித்து விபரம் கேட்டு தகவல் அறியும் உரிமை சட்டத்தில் மனு செய்ததற்கு தகவல் ஆணையர் செல்வராஜ் உத்தரவிட்டும் தாசில்தார் சுந்தரபாண்டியன் தரவில்லை. நீர் பிடிப்பு பகுதியில் பட்டா கொடுக்க கூடாது. கொடுத்திருந்தால் தள்ளுபடி செய்ய உச்ச, உயர்நீதிமன்றங்கள் உத்தரவிட்டும் அதிகாரிகள் ஆக்கிரமிப்பை அகற்ற மறுக்கின்றனர், என்றார்.ஆர்.டி.ஒ., ரமேஷ் கூறுகையில், ''பட்டா வாங்கியிருப்பதால் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.