மேலுார் : மேலுார் பகுதி கண்மாய்களில் அனுமதியின்றி மீன் வளர்ப்போர் மீது ஒன்றிய அதிகாரிகள், பொதுப் பணித்துறைஅதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை எனபுகார் எழுந்துள்ளது.
பொதுப்பணித்துறை கோட்டத்திற்குட்பட்ட 2030 கண்மாய்களில்அந்தந்த ஊராட்சி சார்பில் ஆழ்குழாய் அமைக்கப்பட்டு குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. விவசாயத்திற்கும் பயன்படுகிறது. தற்போது சிலர்அனுமதியின்றி மீன் வளர்ப்பதால் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உள்ளது. விவசாயிகள் கூறியதாவது: விவசாயத்திற்கு தண்ணீர் வெளியேறும் பகுதியை மேடாக்கிமீன் வலை அமைத்து உள்ளதால் விவசாயத்திற்கு தண்ணீர் பாய்ச்ச முடிய வில்லை. மீன் பிடிக்க மோட்டாரை கொண்டு தண்ணீரை வெளியேற்றுவதால் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
பொதுப்பணித்துறையினர் கண்டும், காணாமல் உள்ளனர். சில அதிகாரிகள் இதற்கு உடந்தை. மாவட்டநிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.