வெள்ளகோவில்:வெள்ளகோவிலில், 'ஓ.இ.,' மில்லில் தீ விபத்து ஏற்பட்டது.வெள்ளகோவில், முத்துார் ரோடு, நடேச கவுண்டர் வீதியை சேர்ந்தவர், ராஜ்குமார், 26. வீட்டருகே 'ஓ.இ., மில்' நடத்தி வருகிறார். மில்லில் நேற்று மாலை, 6.45 மணியளவில் 'புளோ ரூம்' பகுதியில் வைக்கப்பட்டிருந்த பஞ்சில் தீப்பற்றி எரிந்தது.மில் பணியாளர்கள் மற்றும் வெள்ளகோவில் தீயணைப்பு துறையினர், அரை மணி நேரம், போராடி தீயை அணைத்தனர். இருப்பினும், பஞ்சு மற்றும் இயந்திரத்தின் சிறு பகுதி சேதமடைந்தது.