திருப்பூர்:மொபைல்போன் வருகையால் காலண்டர் விற்பனை குறைந்துவிட்டது. இருப்பினும், புத்தாண்டு பிறக்கும்போது வீடுகளில் குறைந்தபட்சம் ஒரு காலாண்டராவது இருக்க வேண்டும் என்று மக்கள் கருதுகின்றனர்.
ராசிபலன், நல்ல நேரம், முகூர்த்த தினங்கள் என பல்வேறு தகவல்களை அறிந்து கொள்ளவே, பெரும்பாலானோர் காலண்டர் வாங்குகின்றனர். இதற்காகவே, அனைத்து மத கடவுள்களின் படங்கள், இயற்கை காட்சிகள், அழகான குழந்தைகள் படங்களுடன் நுாற்றுக்கணக்கான காலண்டர்கள் விற்பனைக்கு வந்துள்ளன.
இதுகுறித்து வியாபாரி ஒருவர் கூறியதாவது:2020ம் ஆண்டு உலகின் இருள் காலமாக அமைந்து விட்டது. இனி வரும். 2021 ஒளிரூட்டும் ஆண்டாக அமைய வேண்டுமென்ற ஆசை பலருக்கும் உண்டு. வங்கி உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், சூப்பர் மார்க்கெட் போன்ற நிறுவனர்கள், ஊழியர்களுக்கு பரிசளிக்க முன்வருகின்றனர். விற்பனை இனிமேல் சூடுபிடிக்கும்.இவ்வாறு, அவர் கூறினார்.