திருப்பூர்:மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு, மாதாந்திர உதவி வழங்குவதற்கான, வயது தளர்வு வழங்கும் முகாம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று, வயது தளர்வு முகாம் நடந்தது. மாற்றுத்திறனாளி குழந்தைகள், 18 வயதுக்கு குறைவாக இருந்தால், அரசின் மாதாந்திர உதவி பெற இயலாது. குழந்தைகள் நிலைமையை பரிசீலித்து, கலெக்டர் வயது தளர்வு வழங்கினால் மட்டுமே உதவி பெற முடியும்.அதன்படி, வயது தளர்வு முகாம் நேற்று நடந்தது. சமூக பாதுகாப்புத்துறை அழைத்து வந்திருந்த, 22 மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு உதவி வழங்க, கலெக்டர் ஒப்புதல் வழங்கினார். முன்னதாக, மாற்றுத்திறனாளிகள் நலத்துறையில், தேசிய அறக்கட்டளை சார்பில், மாற்றுத்திறனாளிகளை பராமரிக்கும், பராமரிப்பாளர் நியமன கடிதம் வழங்கப்பட்டது.