ஒரே நாளில் எம்.பி., எம்.எல்.ஏ.,; அவிநாசியில் நிகழ்ச்சி ஏற்பாடு | திருப்பூர் செய்திகள் | Dinamalar
ஒரே நாளில் எம்.பி., எம்.எல்.ஏ.,; அவிநாசியில் நிகழ்ச்சி ஏற்பாடு
Advertisement
 

பதிவு செய்த நாள்

25 நவ
2020
09:01

அவிநாசி:நீலகிரி எம்.பி., தொகுதி நிதியில் இருந்து, 10 லட்சம் ரூபாய் செலவில், அவிநாசி கைகாட்டி புதுார் பகுதியில், 'ஐமாஸ்' விளக்கு பொருத்தப்பட்டுள்ளது.இதை துவக்கி வைக்கவும், கட்சி நிர்வாகிகள் மத்தியில் ஆலோசனை நடத்தவும், வரும், 27 ம் தேதி, நீலகிரி எம்.பி., ராஜா, அவிநாசிக்கு வருகிறார்.அவிநாசி தொகுதிஎம்.எல்.ஏ., சபாநாயகர் தனபால், வரும், 27ம் தேதி தாலுகா அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மக்களிடம் இருந்து மனு பெறுவது, நலத்திட்டம் வழங்குவது உள்ளிட்ட நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார் என, அக்கட்சியின் தகவல் தொழில்நுட்ப பிரிவினர் தெரிவித்துள்ளனர்.ஒரே நாளில், எம்.பி., மற்றும் எம்.எல்.ஏ., என இருவரும் தொகுதியில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்பதால், அரசு துறை அதிகாரிகள் மற்றும் கட்சியினர் தயாராகி வருகின்றனர்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X