அவிநாசி:அவிநாசி அருகே, 'போக்சோ' சட்டத்தில், வழக்குப்பதிவு செய்யப்பட்ட வாலிபர், மருத்துவ மனையில் இருந்து தப் பினார்.திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகே அய்யம்பாளையம் ஊராட்சி, சின்ன ஓலப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் தனபால், 20. புஞ்சை தாமரைக்குளம் அருகேயுள்ள பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.அதே நிறுவனத்தில், பணிபுரியும், 16 வயது சிறுமியை திருமணம் செய்ய முயன்றார். சிறுமியின் தாய் கொடுத்த புகாரில், தனபால் மீது, அவிநாசி அனைத்து மகளிர் போலீசார், 'போக்சோ' சட்டத்தில் வழக்குப்பதிவு செய்தனர். இதற்கிடையே, சிலர் தாக்கியதால் காயமடைந்த அவரை சிகிச்சை முடிந்து, கைது செய்ய போலீசார் தயாராக இருந்தனர்.இதற்காக, மருத்துவமனையில் ஆயுதப்படை போலீசார் இருவர் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். ஆனால், நேற்று காலை, தனபால், தப்படியோடி தலைமறைவானார். போலீசார் தேடி வருகின்றனர்.