திருப்பூர்:திருப்பூர் மாவட்ட அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சி பெறும் பயிற்சியாளர்களுக்கான தேசிய தொழிற்தேர்வு தேதி மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் நிவர் புயல் காரணமாக, நவ., 25 முதல் 27 வரை நடைபெறவிருந்த தேசிய தொழிற்தேர்வு டிச., 3 முதல் 5ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.மாற்றப்பட்ட தேதியில் பயிற்சியாளர்கள் தவறாமல் தேர்வில் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும் தகவல்களுக்கு சம்பந்தப்பட்ட தொழிற்பயிற்சி நிலையங்களில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.