பந்தலுார்:பந்தலுார் புதிய மற்றும் பழைய பஸ் ஸ்டாண்ட்களில் கழிப்பறைகளை துாய்மையாக பராமரித்து வரும் தேவேந்திரன், சுப்ரமணி ஆகியோருக்கு, உலக கழிப்பறை தின விருதுகள் வழங்கி கவுரவிக்கும் நிகழ்ச்சி நடந்தது.கூடலுார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம், மகாத்மா காந்தி பொது சேவை மையம் இணைந்து நடத்திய நிகழ்ச்சியில், பொது செயலாளர் சிவசுப்ரமணியம் வரவேற்றார். தலைவர் காளிமுத்து தலைமை வகித்தார். முன்னாள் ராணுவ வீரர் முகமது, ஒய்வுபெற்ற மருந்தாளுனர் ஆண்டனி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கழிப்பிடங்களை மக்கள் பயன்படுத்த வேண்டிய அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. துாய்மை பணியாளர்கள், இருவருக்கும் விருது வழங்கப்பட்டது. நவுசாத் நன்றி கூறினார்.