ஊட்டி:ஊட்டி, அருகே குருகுலம் பள்ளிக்கு லண்டன் அமைப்பு பசுமை விருது வழங்கியுள்ளது.ஊட்டி அருகே, துானேரி அகலார் பகுதியில் குருகுலம் பள்ளி உள்ளது.'குருகுலம் பள்ளியில் பயிலும் ஒவ்வொரு மாணவரும் தனது வாழ்நாள் முழுவதும், எங்கு வசித்தாலும், ஆண்டிற்கு ஒரு மரக்கன்று நடவு செய்ய வேண்டும்; ஆயுள் காலத்தில் குறைந்தபட்சம், 60 மரக்கன்றுகள் நடவு செய்ய வேண்டும்,' என, அறிவுறுத்தப்பட்டுள்ளது. 'ஆண்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம்;ஆளுக்கு ஒரு மரம் வளர்ப்போம்,' என்ற இயக்கம் மூன்று ஆண்டுகளுக்கு முன் துவக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், லண்டனில் உள்ள, 'இன்டர்நேஷனல் சி.எஸ்.ஆர்., எக்சலன்ட்' என்ற சுற்றுச்சூழல் அமைப்பு, இந்த பள்ளிக்கு பசுமை பாதுகாப்பு விருது வழங்கியுள்ளது. இந்த விருதை பெற்ற பள்ளி தாளாளர் அர்ஜூணன், முதல்வர் சுரேஷ்குமார் ஆகியோருக்கு, மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா பாராட்டு தெரிவித்தார்.